Reality Check India

Dravidian stratagems master list

Posted in Uncategorized by realitycheck on November 17, 2019
 1. ஏன்டா எங்களை இந்து ஆக்கின ? ( pazhakarupiah)
 2. ஏன்டா எங்களை இந்தியனா ஆக்கின ? தமிழ்த்தாய் இருக்குறப்போ பாரத மாதா எங்கிருந்து வந்தாள்?  பாரதி செஞ்ச விஷமம் – ஒருத்தனுக்கு எப்படி இரண்டு தாய் இருக்க முடியும் – ஒரு யோனி .. பழ. கரு  ஹெஹெஹெ (pk)
 3. சூத்திரனா இருந்த எங்களை தமிழனா மாற்றியவர பெரியார் (pk)
 4. அர்ஜுன் சம்பத் அர்ச்சகர் ஆக முடியுமா ? (sv)
 5. கோயில்கள் ஆபாச சிலைகள் இருக்குமிடம் – அகற்றவேண்டும் ™
 6. சிதம்பரத்தில் அர்ச்சகர் ஒரு பெண்ணை அடித்துள்ளாரே — பெண்கள் அர்ச்சகராக இருந்திருந்தால் இப்படி ஒரு அவமானம் நேர்ந்திருக்குமா (mathimaran)
 7. நாங்க மட்டும் இல்லேன்னா நீங்க இன்னிக்கி பாண்ட் – ஷர்ட் போட்டுக்கிட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசியிருக்க முடியுமா ?
 8. பெரியார் இல்லையென்றால் தமிழ் பெண்கள் விடுதலை அடைத்திருப்பார்களா ? சொத்துரிமை கிடைத்திருக்குமா?
 9. மனிதர்களை கோயிலுக்குள் விடாத கும்பலிடம் உங்களை மீட்டெடுத்தவர் பெரியார்
 10. சமஸ்க்ரிதம் தெரிந்தால் மட்டுமே மெடிக்கல் சீட் என்று செக் வெச்ச்சு – பார்ப்பனர்கள் எல்லா மருத்தவ இடங்களையும் அபகரித்து விட்டனர் – நாங்க இதை திருத்தாவிட்டால் உங்க நிலைமையை நினைத்து பாருங்கள்
 11. திருவிளையாடல் புராணம் ஒரு கேவலமான ஆபாசமான நூல் – பார்ப்பனர் நக்கீரன் நமக்கு கொடுத்துள்ளார் (pk)
 12. “ஏன் இந்துக்களை மட்டும் கடுமையாக விமர்சிக்கிறீர் – கடவுள் இல்லை என்றால் ஜீசஸ் இல்லை என்று சொல்ல தில் இருக்கா ?”   சொந்த வீட்டுக்கு தானே ஒட்டடை அடிக்க முடியும் (sv, veeramani,mega line)
 13. பார்ப்பனர் சூத்திரர்களை தே** பசங்க என்று நினைக்கிறான்-etc  (EVR 1972 video,common DK)
 14. தமிழை வைத்து தமிழ் தேசியம் முன்வைத்தால் – அங்கு பார்ப்பனர்களும் வந்து விடுவார்கள். திராவிடம் என்றால் அவர்களுக்கு இடமில்லை (sv)
 15. தமிழ் பார்ப்பனர்கள் 2000 வருடமா உங்களுக்கு கல்வி மறுத்துவிட்டார்கள் (everyone)
 16. தமிழ் பார்ப்பனர்களை தவிர வேறு யாருக்கும் சமஸ்க்ரிதம் தெரிந்ததில்லை (everyone)
 17. இவர்களின் தாய் மொழி சமஸ்க்ரிதம் – தமிழுக்கும் இவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. இவர்கள் வீட்டில் “ப்ரக்ரிதம்” பேசுபவர்கள்.
 18. பண்டைய தமிழகத்தில் பார்ப்பனர்-அல்லாதோர் யாரேனும் பாடம் கேட்டுவிட்டால் அவர்கள் காதில் ஈயம் காச்சி ஊற்றப்படும் (ar)
 19. பைபிள் , குரான் போல மநுஸ்மிருதி தமிழகத்தில் பொது சட்ட ஒழுக்க வாழ்வியல் நூலாக விளங்கியது  (a.rasa)
 20. பழங்குடி போர்வீரனான எங்க முருகுணை பார்ப்பனர்கள் திருடி விட்டார்கள் – இப்போது இருக்குற முருகன் எங்கள் இழப்பின் அடையாளம்  (pk, many sm)
 21. தமிழ் வரலாற்றின் முதல் வில்லன் திருஞானசம்பந்தன் — சமுக நீதி மார்க்கமான சமணத்தை அழித்து , அவர்களை பயங்கரமா கழுவிலே ஏத்திவிட்டார் (everyone)
 22. பரிமேலழகர் அடுத்த வில்லன் – திருக்குறளை அபேஸ் பண்ணிவிட்டார் , எங்க தலைவர் உரை தான் சரியான உரை . (sv)
 23. சங்ககால பாண்டிய மன்னர்கள் தமிழ்-பார்ப்பனர் கைக்கூலி – நிலங்களும், மாடுகளும் வழங்கி குடி வைத்தார்கள் (sv)
 24. சோழ மன்னர்கள் அதை விட மோசம் – தஞ்சை நிலங்களை வாரி வழங்கினார்கள்.
 25. சமூக நீதி திட்டங்களில் கண்காணிப்போ , புள்ளி விவரங்களோ தேவையில்லை – பார்ப்பனர் அல்லாதோர் ஒரே குழு தான். பண்ணையாரும் பண்ணைக்காரனும் பார்ப்பனர்களால் ஒரே விதமா பாதிக்கப்பட்டவர்கள்
 26. “நீ ஏன்டா நாமம் போட்டிருக்கிறாய் ‘என்று அவனிடம் கேட்டேன் . “அது பெருமாள் பாதம்” என்றான் அவன்  ; “சேரி அப்டின்னா பெருமாள் நாமம் போட்டிருக்காரே? அது  யார் பாதாம்” ? வகை: மொக்க தனமா கிண்டல் அடித்தல் ; (என் 12 தலைப்பின் கீழ் , சொந்த வீட்டை தானே சுத்தம் செய்யமுடியும் )  (subavee)
 27. 40 கோடியா இருந்த எங்களை ஏன்டா 7 கோடியா ஓடிக்கின ?? கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா 40 கோடி தமிழ் பேசிக்கொண்டிருந்த திராவிட-தமிழ இனத்தை ஸம்ஸரிடத்தை திணித்து இப்போ மஹா ராஷ்டிர , ஆந்திர, கன்னடம் , மலையாளம் , துளு என பிளந்து கிடக்கிறோமே – ஏன் அப்படி செய்தாய் !! (pazhakarupiah video)
 28. ராமன் ஆரியன் , ராவணன் திராவிடன் – ராமாயணம் ஆரிய படையெடுப்பின் பதிவு சான்று — நாங்கள் தீபாவளி கொண்டாடமாட்டோம் !!
 29. இஸ்லாமியனும் , கிறிஸ்தவனும் சாதி பார்க்கமாட்டான் – இந்துக்களிடமிருந்து இவர்களுக்கும் இந்த நோய் பரவிவிட்டது – எனவே அந்த மதத்தில் காணப்படும் சாதி வேறுபாடிற்கு இந்துவே காரணம்  …
 30. பெரியார் டயலாக் ‘கடவுளை கற்பித்தவன் முட்டாள்,…’ etc வெறும் வெட்டிப்பேச்சு. எங்களுக்கு ஐயர் மட்டுந்தான் பிடிக்காது. வேற ஏதாவது சாதி அர்ச்சகர் கொண்டாங்க! ஆனால் ஜக்கி பிடிக்காது.
 31. தேவதாசி தடுப்பு சட்டத்தை அமுல் படுத்தி – பார்ப்பனர் பரதநாட்டியத்தை அபகரித்துவிட்டார்கள் ( டேய் – நீங்க திருப்பி அபகரித்துக்கொள்ளுஙகேன் , சத்தியமூர்த்தி ஐயர் வாழாள் முழுதும் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை எதித்தாரே) 🙂
 32. பிராமண பெண்களுக்கும் சமஸ்க்ரிதம் மறுக்கப்பட்டது – அதனால் வீட்டில் தமிழ் பேசும்படியான கட்டாயம் நேர்ந்தது (தொ பரமசிவன் ட்விட்டர் )
 33. காஞ்சி மடத்தை பற்றி கேட்கவே வேண்டாம் – மடாதிபதியை பார்ப்பனர்-அல்லாதோர் யாரும் தொடமுடியாது. பார்ப்பனர் கட்டிபிடிக்கலாம். காமாட்சி அம்மன் கோயிலே-அல்ல புத்த விஹாரம் இப்படிக்கு நீண்ட அவதூறு பட்டியல் (தொ பரமசிவன்..ட்விட்டர்)
 34. சேரன்மாதேவி குருகுலம். வா.வே.சு நடத்திய குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கு தனி பந்தியில் பாயாசமும் பொங்கலும், வெளியே பார்ப்பனர்-அல்லாதோருக்கு பழஞ்சொற் .. (திராவிட இயக்க அடித்தளம் 1)
 35. குலக் கல்வித்திட்டம். – பார்ப்பனர்கள் சதி செய்து , அப்பன் தொழிலை தான் மகனும் பார்க்கவேண்டும் என்ற கொள்கையை நிலைநாட்டும் முயற்ச்சியை ஈவேரா முறியடித்தார் ! (உண்மை என? அப்படி ஒரு திட்டமே இருந்ததில்லை – vocational படிப்புக்கு இவனுங்க வைத்த பட்டப்பெயர் “குல கல்வி”) திராவிட இயக்க அடித்தளம் 2
 36. ஏன்டா எங்களை சொந்த கற்பனைக்கு ஏற்ப புதிய திராவிட-சமய கோயில்கள் கட்ட சொல்ற? ஆம் எங்க முதலாளிக்கு 500 கோடி சல்லிக்காசுக்கு சமம்.  மால், சாராய ஆலைகள் காட்டுவோம், நாங்க இப்போ கேக்குறது மீனாட்சி அம்மன் கோயில்.
 37. தேவதாசி முறை ஒழிப்பு சட்டம்.

  சத்தியமூர்த்தி : வேணாம்டா.. தமிழ் நாட்டியக்கலை அழிந்துவிடும் டா .
  திராவிடன் : போடா .. அப்டின்னா உங்க ஐயர் பொண்ணுங்கள வந்து ஆட சொல்லுங்க .. பிகிலு.. மாஸ்
  சத்தியமூர்த்தி : எக்கேடுகெட்டு போங்கடா .. செரி
  50 ஆண்டுகளுக்கு பிறகு
  திராவிடன் : அய்யய்யோ… பாப்பானுங்க சங்ககால சதிராட்டத்தை திருடி பரதநாட்டியம் ஆக்கிட்டானுங்களே ! எல்லாம் போச்சு… paapஅரங்கேற்றம் ஒழிக

உங்களுக்கு ஏதாவது தோன்றினால் கமெண்ட்ஸில் பதிவு செய்யவும் — பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் !

ஏன்டா எங்களை இந்துவாக ஆக்கினாய் ?

Posted in Uncategorized by realitycheck on November 13, 2019

ஏன்டா எங்களை இந்துவாக ஆக்கினாய் ?

சில மாதங்களுக்கு முன் பழ கருப்பையா சொல்லி கொடுத்த வரிகளை இன்று பல திராவிட கிளை பேச்சாளர்கள் பரப்பி வருகிறார்கள் . விஷயம் தெரியாதவர்கள் கேட்டால் ஏதோ சூப்பர் பாயிண்ட் போல தோன்றும் — ஆனால் வெறும் சல்லித்தனமான பேச்சு. அலசலாம் வாங்க.
இவரு என்ன சொல்லவராரு என்றால் : சைவம், வைணவம், கௌமாரம் , வைதீகம் , .. இவைகள் தான் உண்மையான மதங்கள் — மதம் என்ற வரையறைக்குள் அடங்கக்கூடியவை.

எதற்காக இவ்வாறு தனி தனியாக இருந்த எங்களை ஒன்று கூட்டி ஒரு கூடாரத்தில் வைத்து ஹிந்து என்று அதற்கு பட்டம் அளித்தாய் .. வாங்க எல்லோரும் வெளியேறி விடலாம் , வாங்க தனி தனியாக முடிந்த வரையிலும் குறிகிய வட்டத்திற்குள் அடக்கிடோண்டு அடுத்த வட்டத்தில் இருக்கிறவனை தள்ளி வைத்து , சுவர் எழுப்பி அதனால் நம்மளுடைய தனித்துவதை காட்டலாம் .