Reality Check India

IIT and Dravidian arguments

Posted in Uncategorized by realitycheck on December 15, 2019

சமீபத்தில் ஒரு நண்பர் எனக்கு ஒரு ட்வீட் அடித்தார்

Get real…the under grad students are inconsequential at best. Get a list of tenured ppl and see for yourself. They’re the kinda fucks who put Dr.Argogyasamys name after Bhaskar Ramamurti…if you know them both you’d know what am talking abt

 

பாஸ்கர் ராமமூர்த்தி கெட்டவர் , ஆரோக்கியசாமி நல்லவர் — இதற்கு மேல பெரியரிஸ சித்தாந்தத்திற்குள் ஆராய என்ன அடங்கி இருக்கிறது ? ஒரு குழந்தை கூட புரிந்துகொள்ளும். எனக்கு இவர்கள் இருவரிடமும் தனிப்பட்ட அறிமுகம் கிடையாது . தேவையும் இல்ல. ராமமூர்த்தி இல்லனா கிருஷ்ணமூர்த்தி, ஆரோக்கியசாமி இல்லனா வீரமணி – இவர்கள் இன அடையாளமே முக்கியம், தனி திறைமையோ புலமையோ அல்ல.

என் தரப்பினர் இத்தகைய வாதங்களுக்கு தர்க்க ரீதியாக பதில் அளிக்க இயலாதவர்களாகவே இருக்கிறார்கள் . நான் கோர் கோட்பாடுகளில் வேரூன்றி நிற்பதால் என்னால்  பதில் அளிக்க முடிகிறது . மற்றவர்கள் கோபம் அடைவார்கள் , திட்டுவார்கள் , மொக்கை மீம்ஸ் போடுவார்கள், பயங்கரமான  ராஜதந்திர திட்டம் போடுவார்கள் – நேரடியாக பதில் மட்டும் வரவே வராது. உதிரி பூக்கள் போல பல தகவல்களை வெளியிடுவார்கள் , அதை மாலையாக தொடுத்து அவர்களால் தர முடியாது. இதற்கு தான் கோர் இயக்கம் மலர வேண்டும். செரி விடுங்க, இது எங்க உள் பிரச்சினை , மேட்டருக்கு வருவோம்.

உங்க பார்வையில் “BTechக்கும் IITகும் சம்மந்தமே இல்லை”  என்று தான் தோணும், உங்களுக்கு அங்கு படித்துவரும் மாணவர்கள் கண்ணுக்கே தெரியமாட்டார்கள்  . அங்குள்ள பதவிகள் , அதிகார இடங்கள்,மட்டும் தான் தெரியும். வியப்படைய ஒன்றுமில்லை , பெரியாரிஸ்ம் என்பது ஒரு மாறுதலை/எதிர்/பழி இயக்கம் தானே எனவே உங்களுக்கு பாஸ்கர் ராமமூர்த்தி என்கிற இன எதிரியை அவர் வகிக்கும் அதிகார பதவியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும். அதை தாண்டி IIT க்கும் உங்களுக்கும் எந்த கொடுத்தல்-வாங்குதலும் கிடையாது.

குற்றச்சாட்டின் படி IITM அவ்ளோ பெரிய கொடுங்கோன்மை சிறைச்சாலையாக விளங்குகிறது என்றே வைத்துக்கொள்வோம். அங்கே படித்துவரும் மாணவர்கள் அல்லவா அதனை முன்வைக்கவேண்டும் ? மற்ற மாநிலத்து மாணவர்கள் ரெட்டி,நாயுடு,காப்பு,யாதவ்,செட்டி,பணியா என்றெல்லாம் தமிழ்ப்பார்ப்பனர் அல்லாதோர் பெரும் அளவில் படித்து வருகிறார்களே, அவர்களுக்கு இல்லாத ஆதங்கம் நம்மளை போன்ற வெளியாளுங்களுக்கு எதற்கு ?

திராவிடம் மிக பெரிய பதவியும் அதிகாரத்தையும் கைப்பற்றிய இயக்கம். 10 பல்கலைக்கழகங்கள் உங்க கட்டுப்பாட்டில் இருக்கின்றனவே – அதை தவிர உங்க தலைவர்களில் பலர் மிக பெரிய கல்வி பிரபுக்கள் .. ராமமூர்த்தி போன்றவர்கள் உள்ளே கால் வைக்க வாய்பில்லயே. இவைகளை மேம்படுத்த வேண்டியது தானே? 30 உலக தரம் பெற்ற நிறுவங்களுக்கு இடையே ஒரு திருஷ்டி பொம்மை போல பாசிச IIT இருந்துவிட்டு போகட்டுமே.

நான் IIT கேம்பஸ்குள் கால் வைக்காதவன். நீங்க சொல்லும்படி அது தமிழ்ப்பார்ப்பனர் ஆதிக்க பூமியாக கூட இருக்கலாம். நான் அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வில்லை. இருந்தாலும் சில சர்ச்சைகள் மிக முரணாக தோன்றுகிறது . Dr வசந்தா கந்தசாமி விவாகரத்துக்கு வருவோம். நீங்க சொல்லும்படி ஒரு மிக பெரிய கணித மேதையும் , ஆசிரியருமான அவர் , ஒரு மிக பெரிய பார்ப்பன ஆதிக்க கொடுமை சூழ்ச்சி புதைமணலில் சிக்கி கொண்டு, தன திறமையை வெளிப்படுத்த முடியாமல் , மாணவர்களிடையே பகிரமுடியாமல் பல ஆண்டுகளாக தினறிக்கொன்றிருந்தால் நீங்க ஒரு உண்மையான இயக்கமாக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? அவரை அங்கிருந்து மீட்டெடுத்து அண்ணா பல்கலை HODயாக நியமித்திருக்க வேண்டும். மாறாக அவரை அங்கேயே வாட விட்டது ஏன் ? பார்ப்பனீயத்தை எதிர்த்து போராட வேறு எவ்வளவோ வழி இருக்கிறதே. ஒரு பெரிய புலமை வாய்ந்த ஒடுக்கப்பட்ட தமிழ் பெண் ஆசிரியர் தன் திறமைகளை அடகு வைத்து தான் போராட வேண்டுமா. விடை என்னவாக இருக்கும் ?