Reality Check India

ஏன் அவங்கமட்டும் அடிபணிய மறுக்கவேண்டும்

Posted in Uncategorized by realitycheck on January 17, 2020

மொழிப் போர், சல்லிக்கட்டு, அணுசக்தி போராட்டம், ஹைட்ரோ கார்பன், எட்டு வழிச் சாலைக்கு போராட்டங்கள், ஸ்டெர்லைட் போராட்டம் என அனைத்திலும் தமிழனுக்கு எதிராக நிற்கும் பிராமணர்களே.. தமிழர்களது போராட்டங்கள் உங்கள் இனத்திற்கானவை அல்ல என்பதாலா?  பதில் சொல்லுங்க

மற்றும்   தமிழ் பிராமணியத்தின்  மனசாட்சிக்கு – சுப.சோமசுந்தர

பதில் சொல்ல ரெடி , நீங்க கேட்க ரெடியா ?

இவைகள் அனைத்தும் அரசியல் சார்ந்தவை .. எந்த ஒரு பிரச்சனையிலும் உள்ளே புகுந்து, ஆராய்ந்து, மூல பொருளை கண்டடெடுத்து , அதில் கலக்கப்பட்ட ஊழலையும் பொய் புரட்டுகளையும் விலக்கி , கடைசியாக ஒரு புரிதல் நிலையை அடையவேண்டும். அதற்கு பிறகு அந்த நிலைப்பாட்டை கைவிடாமல் கடை பிடிக்க வேண்டும்.

இந்த ஜல்லிக்கட்டு, மீத்தேன் , பிரச்சனையில் – செட்டியார்கள், கௌண்டர்கள்,தேவர்,முதலியார், எல்லோரும் ஒரே பக்கம் தான் நிற்கிறார்களா ?? அப்புறம் எதற்கு பிராமணர்களை தனிமைப்படுத்தவேண்டும் …

நீங்க சொல்லறது எப்படி தெரியுங்களா இருக்கு — ” என்னடா இது , நம்ம தலைமை குழு கட்டளை இட்டதை எல்லா தமிழ் சாதியும் மறு கேள்வி கேட்காமல் ஆட்டு மந்தை மாதிரி போராட்டத்தில் குதிக்கின்றன – பிராமணர்கள் மட்டும் அடங்க மாட்டேங்கிறாங்களே.. ஏதோ யோசிக்கணுமாம்…” ”  🙂

ஒரு antidosis கதை

Posted in Uncategorized by realitycheck on January 4, 2020

மேல்தட்டு மக்கள் “நாங்களும் நசுக்கப்பட்டவர்களே” என்கிற கோரிக்கையை முன்வைத்தால் அதனை ஆராயவேண்டாமா ? மற்றவர்களை பழிக்காமல் / எளியவர்களுக்காக உருவாக்கப்பட்ட சமூக நீதி சலுகைகளை ஆக்கிரமிக்காமல் / வேரறுப்போம் கோயில் இடிப்போம்   பிரச்சாரம் செய்யாமல் இருந்தால் தேவையில்லை ! ஈவேரா. சுபவீ , பழ கருப்பையா , மதிமாறன் , அப்படிப்பட்டவர்களா ? பகுத்து ஆராய அணுகுமுறை ஏதாவது இருக்கா ?

images

3000 ஆண்டுகளுக்கு முன் ஏதென்ஸ் நகரத்தில் ஒரு நூதன விதிமுறை வைத்திருந்தனர் — Antidosis , என்ன தெரியுங்களா இது? எங்க ஊர் கதையை கேளுங்க.

எங்க ஊர்ல ஒரு நீண்டகால மரபு உண்டு  – ஒவ்வொரு ஆண்டும் எவனொருவன் மிக பெரிய பணக்காரனாக கருதப்படுகிறானோ ஏரி மராமத்து செலவு அம்புட்டையும் அவன் தலையில கட்டிடுவாங்க. இரண்டாவது பணக்காரன் எஸ்கேப் !! உண்மையிலேயே யாரு கையில எவ்ளோ இருக்குன்னு ஆண்டவனுக்கே வெளிச்சம்.

வருஷா வருஷம் இவ்வாறு ஒருவனே ஏரி மராமத்து செலவை ஏற்றுக்கொண்டு நடத்தி வந்தார். செலவுகளும் அதிகரித்துக்கொண்டே போயின — ஒரு வருஷம் “இந்த வருஷம் நம்மக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கே – பக்கத்து தெரு ராமசாமி நம்மள மிஞ்சிட்டான் போல — இந்த வருஷம் அவன் கட்டட்டுமே” என்று அவருக்கு தோணியது . இந்த கருத்தை ஊர் நாட்டாமை கிட்ட சொல்ல , அவரும் — ” அய்யா ஊர் மக்கள் இன்னும் உங்களை தான் no 1 பணக்காரன்னு சொல்றாங்க ” , பக்கத்து தெரு ராமசாமி தலையாட்டிக்கொண்டு ‘நீங்க தான் no .1 தல ” – – பில் தொகை 20லட்சம்.

இத எப்படி மறுப்பது ? அவரவர் சொந்த சொத்து விவரங்கள் ரகசியமாக இருக்கும் நிலையில் எப்படி அவன் என்னை விட பணக்காரன் என்று நிரூபிக்க முடியும்? வேற வழியே இல்லையா ..

அன்றைக்கு எங்கூர்ல ஒரு புது திருத்தம் கொண்டு வந்தாங்க.

rule 1) ஊர் பணக்காரன் அவனே ஒப்புக்கொண்டு ஏரி மராமத்து செலவுகளை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அவன் வேறு ஒரு பணக்காரனை நியமிக்கலாம்.

rule 2) அதே போல் நியமிக்க பட்ட பணக்காரன் ஒப்புக்கொண்டு செலவை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது அவனோட எல்லா சொத்துக்களாலயும் முதல் பணக்காரனுடன் பரிமாறிக்கொள்ளவேண்டும் (exchange)

அந்த ஆண்டு ஏரி மராமத்து பக்கத்து தெரு ராமசாமி தலைமையில் ஜாம்ஜாம்னு நிறைவேறியது!

மேலும் படிக்க https://en.wikipedia.org/wiki/Antidosis

இது இன்றைய சூழலுக்கு பொருத்தமான கதை தான் .. சுபவீ கண்ணன் போன்ற திராவிட தலைவர்களுக்கு தங்கள் வசம் உள்ள செல்வமும், எஸ்டேட்களும், அரண்மனைகளும் , நிறுவனங்களும் கண்ணுக்கே தெரியாது.  ஆனால் தெரியும்.   உங்கள் எதிரிகளுடன்  செல்வாக்குகளை பரிமாறி கொள்ள தயாரா?