Reality Check India

சமூக நீதியும் புள்ளி விவரங்களும்

Posted in Uncategorized by realitycheck on August 2, 2020

இன்று மரு.ஷியாம்  ட்வீட் ஒன்றை இட்டிருந்தார்

சமூக நீதி அரசியலின் அடி வயிற்றில் கையை வைத்த இந்த டீவீட்டை பற்றி என்னுடைய சில கருத்துகள்..

1. இட ஒதுக்கீடுக் கொள்கை வேறு, செயல்முறை வேறு. கொள்கையை ஆதரிப்பவர்கள், செயல்முறையை எதிர்க்கலாம்.

2. வகைப்படுத்தாமல் ஒரே பிரிவில் எல்லோருக்கும் இடஒதுக்கீடு வழங்குவதும் – இட ஒதுக்கீடுத் திட்டமே இல்லாமல் இருப்பதும் ஒன்றே! வரம்பிற்கு வெளியே ஒரு சிலரை தள்ளுவதற்கான பழி திட்டம். இப்படிப் பாருங்கள் – தமிழ் நாட்டில் பார்ப்பனர்கள் யாருமே இல்ல என்று எடுத்துக்கொள்ளுங்கள்: “இட ஒதுக்கீடு இருக்கிறதா?” ராமதாஸ் பயங்கரமாகப் போராடிப் பெற்ற உள்-ஒதுக்கீடு திராவிடம் லேசில் விட்டுக் கொடுக்கவில்லை. சிதறிக் கிடக்கும் சாதிகள் இதுபோன்ற பெரும் போராட்டங்கள் மூலம் நீதி தேட வாய்ப்பில்லை.

3. சமூக நீதி தொடர்பான புள்ளிவிவரங்கள் மூடி மறைக்கப் படுகின்றன..ஏதோ ஒரு சிலர் இங்கும் அங்குமாக பீராய்ந்து சேகரித்த செய்திகளே நம் கைவசம் உள்ளன. உதாரணத்திற்கு : மொத்தத்தில் சரி பாதியான அரசுப் பள்ளி மாணவர்கள் 28,000 மருத்துவ இடங்களில் வெறும் 140 பெற்ற திகில் செய்தி தற்செயலாக அம்பலமானது. சமூக நீதி காத்த வீராங்கனை / தமிழ் இனத் தலைவர் / பேர்-ஆச்சாரியார் சுபவீ/சிறு-ஆச்சாரியார் வீரமணி இந்த செய்தியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இத்தகைய மூல புள்ளிவிவரங்கள் மறைந்திருந்தால் அவை தனி உயிரெடுத்து பெரும் பூதங்களாக மாறிவிடும். அதை அறிந்தவனே மகாராஜா .. அரசியல் பேரம்-பேசுதல் இலாகா பகிர்ந்து கொள்ளுதல் காலப்போக்கில் இதைச் சுற்றியே நடைபெறும்.

4. நிகழ்காலத்தில் பொதுப் பிரிவில் போட்டியிட இன்னும் வலிமை அடையாத சமூகத்தினருக்கே இடஒதுக்கீடு உரியதாகும். முற்பட்ட வகுப்பினர்களின் சமூக நீதி கோரிக்கைகள் அனைத்தும்  பண்டைய காலத்தில் நிகழ்ந்த , சரிபார்க்க முடியாத,   ஏதோ ஒரு கட்டுக்கதை அடிப்படையில் ஊன்றிருக்கும்.   எ.கா: ‘ராமன் சம்பூகனை வதம் செய்துவிட்டான் / சூரபத்மனுக்கு பரிகாரம்..’. இந்த வகுப்பிற்கு வாதாடும் சுபவீ, பழ.கரு, ஆர்.எஸ்.பாரதி, சோமீ-யில் பல ‘தமிழ்’ திராவிடப் பிரபலங்கள் முதலிய நபர்களே இன்று காணப்படும்  வெறுப்பு பிரச்சாரத்திற்கு முன்னிலை வகிக்கிறார்கள் . புள்ளிவிவரங்கள் மூலம் மெய்ப்படுத்த முடியாதவர்கள் வெறுப்பின் வழியாக வெளிப்படுத்துகிறார்கள். சிஸ்டம் இவ்வாறு அமைந்திருக்க இவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. இதெல்லாம் சமூக நீதிக்குத் தேவையே இல்லை !

5. இதே திராவிட இனத்தைச் சேர்ந்த கேரளா,கர்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இந்த பிரச்சினை இல்லை. ஏறத்தாழ விகிதாச்சார அடிப்படையில் ABCDE உள்-ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார்கள் — காழ்ப்பும் வெறுப்பும் அச்சமுதாயங்களில் குறைவாகக்  காணப்படுகின்றன.

 

 

 

3 Responses

Subscribe to comments with RSS.

 1. td said, on August 4, 2020 at 6:44 am

  Hey rc,
  Now i am not a tamil but i did use google to translate the above in English. From what i understood is that the BC section who are now fully qualified to compete in the open, use strawmen like ram-sambook stories(lol this happens in the north too) instead of data to justify their reservation. Now i assume that is would be true only in case of Tamil Nadu because as per DOPT data(published in their annual reports which is available on their website) , % of OBCs in central govt. Class-A jobs is just around 14% . Karunanidhi and other often share screenshot of this data to show how obc reservation is not “properly” implemented. What do you think of this ?

 2. dagalti said, on August 5, 2020 at 8:04 pm

  சமீகபாலமாக ஐயன்மீர் தமிழிலும் எழுதத் தொடங்கியிருப்பது கண்டு மகிழ்ச்சி.

  சில நிட்பிக்குகள்

  /உயிரெடுத்து பெரும் பூதங்களாக மாறிவிடும்/
  உயிர்பெற்று?
  Or intentional குசும்பு?

  /திராவிட இனத்தைச/

  வாசகர்களாகிய நாங்களே Scare quotes இட்டுப் படித்துக்கொள்ளவேண்டும் தானே.

 3. realitycheck said, on August 13, 2020 at 7:02 am

  திராவிடர்களுக்கு இட ஒதிக்கீடை பற்றி அடிப்படையாகவே தவறான புரிதல் இருக்கிறது. ஓபிசி என்பது ஒரு பட்டியல், இதில் இணைக்கப்பட்டுள்ள சாதிகள் ஒன்றொன்றாகச் சமூக மற்றும் கல்வி தளங்களில் போட்டியிடத் திறனுள்ளதா இல்லையா என்று கூர்ந்தாய் வேண்டும். நடைமுறையைக் கண்காணிப்பிற்கு உள்ளாக்கவேண்டும் .

  அ. UR பொதுப் பிரிவில் போட்டியிடும் திறனுள்ள சாதிகள் ஓபிசி பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும். அப்பொழுது தான் இன்னமும் வலுவடையாத சாதிகளுக்கு சமூக நீதி சென்றடையும்! திராவிடன் அல்லது சூத்திரன் போன்ற போலி அடையாளங்களைப் பயன்படுத்துவதற்கு இடமில்லை.

  ஆ : வகுப்புவாரி இட ஒதுக்கீடு நீங்கள் நினைக்கிற படி உயிரெடுக்காது . 97% நாம் – 3% அவாள் என்று பொய் முடியாது. 0.1% இசைவேளாளர் , 1.8% செட்டியார், 1% நாயுடு .. இப்படி சின்னாபின்னம் ஆக்கும் இலக்கை நோக்கியே செல்லும். . ஓர் அளவிற்குச் சாதி குழுக்கள் உருவாக்கிச் சமாளிக்கலாம். அதில் விளையும் அரசியல் பயன்களை அறுவடை செய்யலாம். இதெல்லாம் சமூக நீதி ஆகிவிடாது.

  இ: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வெளிவந்த புள்ளிவிவரங்களை வைத்துப் பார்த்தல் 93-95% மக்கள் ஏதாவது ஒரு சமூக நீதி வகுப்பில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இது எவ்வாறு சாத்தியம் – எல்லா தமிழர்களும் கல்வி/சமூக தராசில் ஒரே தட்டில் இருக்க, பார்ப்பனர்கள் மட்டும் இன்றோர் எதிர் தட்டில் இருக்கமுடியுமா? திராவிடன் என்கிற போர்வையைப் பயன்படுத்திப் பல முற்பட்ட வகுப்பினர் சமூகநீதி இடங்களைக் கைப்பற்றி வருகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாமா ? இதைத் தட்டிக்கேட்க #கோர் தவிர வேறு நாதியில்லை.

  கடைசியாக: “செரி ஏதாவது பண்ணி தொலைங்க” என்றும் விட முடியவில்லை. தொடர்ந்து உங்கள் வரம்பிற்கு வெளியே தள்ளப்பட்ட பார்ப்பனர்களைத் தாக்கி வருகிறீர்கள். தமிழ் “சமயம்” vs “பார்ப்பன” என்கிற ஆயுதத்தை ஏந்தி தமிழ் ஹிந்து நம்பிக்கைகளைக் கடுமையாகவும் ஆபாசமாகவும் சாடி வருகிறீர்கள். பதில் வரும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: